ஒருவன் தானும் தன் நம்பிக்கையும் அருகருகே நடந்து சென்று கொண்டிருப்பதாக கனவு கண்டான்.
ஒவ்வொரு தடவையும் அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் நடந்து சென்ற தரையில் இரண்டு ஜோடி பாதங்கள் தடம் பதித்திருந்தன.
அவனது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவனோடே நடந்து வந்து கொண்டிருந்தது நம்பிக்கை.
ஒரு சந்தேகத்தில் நடந்து வந்த பாத தடங்கலை அவன் திரும்பிப்பார்த்தான்.
ஒரு சில இடங்களில் ஒரே ஜோடி பாதங்கள்தான் இருந்தன.
ஆழ்ந்து ஜோசித்தபோது அவை தான் துன்பமாக இருந்த கால கட்டங்கள் ஒவ்வொன்றும் என்பதை தெரிந்துகொண்டான் அவன்.
நம்பிக்கையை பார்த்து பெருமூச்சோடு கேட்டான் அவன்
'என்னோடு தொடர்ந்து பயணித்த நீ.. என் துக்க காலங்களில் என்னை விட்டு ஓடிச்சென்றிருக்கிறாயே! ஏளனம் தொனிக்க கேட்டான்.
அதற்கு நம்பிக்கை சொன்ன பதில் :_
நான் உன்னை விட்டு ஒருபோதும் விலகியது கிடையாது. உனது துன்ப காலத்தில் நடக்க முடியாமல் படுத்துவிட்ட உன்னை நான்தான் தூக்கி கொண்டு நடந்து வந்திருக்கின்றேன். நிதானமாகப்பார் அவை எனது காலடித்தடங்கள்.
நம்பிக்கையோடு நடை பயில்போம்...
ReplyDeleteநாம் விழ்ந்தாலும் நம்பிக்கை வீழாது....
அற்புதமான தன்னம்பிக்கை வரிகள்..
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்...
தங்களின் இந்த ஒரு பதிவிலே நான் மனதை பரிகொடுத்தேன்...
ReplyDeleteதங்கள் வலைப்பூவை முதல் ஆளாக இணைந்துள்ளேன்...
வாழ்த்துக்கள் நண்பரே...
அன்பரே அருமை
ReplyDelete