உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். அதனால்த்தான் ஓவியப்பாடம் நடத்தப்படும்போது அல்லது ஓவிய பயிற்சிகளின்போது ஒரு பொருளை பார்த்து வரைய சொல்லும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்களை கொடுக்கின்றனர்.
அதேபோல ஒவ்வொருவரின் மன ஓட்டங்களும் ஒவ்வொருவிதமாக இருக்கும் அவ்வளவுதான்.
உதாரணத்திற்கு உலகில் அனைத்துமே ஒரே நிறமான வெள்ளையாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள் உலகம் நன்றாகவா இருக்கும். நிறைய வர்ணங்கள் சேரும்போதுதானே அனைத்தும் நன்றாக இருக்கும்.
அதேபோலத்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறங்கள் உண்டு. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு நிறத்தையும் இரசிப்பதுபோல நாம் ஒவ்வொரு குணங்களையும் இரசிக்கதொடங்கினால் எதுவும் ஆனந்தமே.
இவர் இப்படி, இவர் இதுதான், இவர் சரிவரமாட்டார் இவர், துரோகி, இவர் எதிரி, என்ற பிறேம்களை எம் மனம்தான் போட்டுக்கொள்கிறது. அந்த பிரேம்களை புடுங்கி எறிந்துவிட்டு, எல்லோரும், எல்லாமும், என இருந்து, அத்தனையையும் இரசிக்கப்பழகினால் யாவருக்கும் சந்தோசமே அல்லவா?
எனவே வர்ணமயமாக வாழ்வோமா?
No comments:
Post a Comment