நண்பர்களே ஒரு நிமிடம்....
நட்பு கொண்டவர்கள் நாணையத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவர்கள். இருவருக்கும் நட்பின் அனுபவிக்கும் உரிமை சமனானதே.
அதைவிட்டுவிட்டு ஒருவர்மேல் ஆதிக்கம் செலுத்த தலைப்படும்போது தான் நட்பு நரகமாகிவிடப்பார்க்கின்றது.
சரியோ தவறோ எம் நண்பர்களையும் ஒரு முடிவு எடுக்கும்போது சேர்ந்து அலோசிக்கவேண்டும். பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதில் எந்த பலனும் இல்லை, அதை பக்குவமாக சொல்லி திருத்தி எடுப்பதில்த்தான் நட்பின் திறமையே இருக்கின்றது.
நண்பர்கள் வாக்குவாதப்படுப்போது ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள்,
'இது எனக்கும் உனக்குமான முரண்பாடு இல்லை! நீ இப்போது முன்வைக்கும் கருத்திற்கும், எனது தற்போதைய கருத்துக்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதை.
தினம் மாறும் கருத்துக்களால் மகத்தான மாறாத நட்பை இழக்கவேண்டுமா? ஒரு கணம் யோசியுங்கள்.
மனிதன் உணர்வுகளின் சங்கமம். எப்போதும் அவன் ஒரேபோல சிரித்துக்கொண்டிருப்பவனும் இல்லை, எப்போதும் துயரத்தால் அழுதுகொண்டிருப்பவனும் இல்லை. சமுகத்தாங்கங்கள், உளவியல் மாற்றங்கள் என்று எண்ணில்லாத அலையடிப்புக்களை தாங்கவேண்டிய உங்கள் நண்பனின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்.
ஓர் சிறிய மனக்கசப்பு என்பதற்காக பல நாட்கள் பழகிய இனிமையான பொழுதுகளை, அவரிடம் கண்டு இரசித்த முகபாவங்களை, அற்புதமான பகிரல்களை, சில மகிழ்ச்சி பகிர்வுகளை, ஒரேயடியாக மறந்துவிடமுடிகிறதா? நட்பில் உண்மையான சுகம் விட்டுக்கொடுத்தல்தானே!
இப்படியாக எத்தனையோ எத்தனையோ சின்னச்சின்ன விடயங்கள் எம்மிடையே மிகப்பெரிய முரண்பாட்டு மதில்களை எழுப்பிவிடுகின்றது. அட உலகமே ஒருமித்து நின்று பிரித்துக்கட்டிய பேர்லின் சுவரே தகர்ந்துவிட்டது. உங்கள் சின்னச்சின்ன நட்பூடல்கள் தகர்ந்துவிடாதா என்ன?
நட்பு கொண்டவர்கள் நாணையத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவர்கள். இருவருக்கும் நட்பின் அனுபவிக்கும் உரிமை சமனானதே.
அதைவிட்டுவிட்டு ஒருவர்மேல் ஆதிக்கம் செலுத்த தலைப்படும்போது தான் நட்பு நரகமாகிவிடப்பார்க்கின்றது.
சரியோ தவறோ எம் நண்பர்களையும் ஒரு முடிவு எடுக்கும்போது சேர்ந்து அலோசிக்கவேண்டும். பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்டுவதில் எந்த பலனும் இல்லை, அதை பக்குவமாக சொல்லி திருத்தி எடுப்பதில்த்தான் நட்பின் திறமையே இருக்கின்றது.
நண்பர்கள் வாக்குவாதப்படுப்போது ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள்,
'இது எனக்கும் உனக்குமான முரண்பாடு இல்லை! நீ இப்போது முன்வைக்கும் கருத்திற்கும், எனது தற்போதைய கருத்துக்கும் இடையிலான முரண்பாடுதான் என்பதை.
தினம் மாறும் கருத்துக்களால் மகத்தான மாறாத நட்பை இழக்கவேண்டுமா? ஒரு கணம் யோசியுங்கள்.
மனிதன் உணர்வுகளின் சங்கமம். எப்போதும் அவன் ஒரேபோல சிரித்துக்கொண்டிருப்பவனும்
ஓர் சிறிய மனக்கசப்பு என்பதற்காக பல நாட்கள் பழகிய இனிமையான பொழுதுகளை, அவரிடம் கண்டு இரசித்த முகபாவங்களை, அற்புதமான பகிரல்களை, சில மகிழ்ச்சி பகிர்வுகளை, ஒரேயடியாக மறந்துவிடமுடிகிறதா? நட்பில் உண்மையான சுகம் விட்டுக்கொடுத்தல்தானே!
இப்படியாக எத்தனையோ எத்தனையோ சின்னச்சின்ன விடயங்கள் எம்மிடையே மிகப்பெரிய முரண்பாட்டு மதில்களை எழுப்பிவிடுகின்றது. அட உலகமே ஒருமித்து நின்று பிரித்துக்கட்டிய பேர்லின் சுவரே தகர்ந்துவிட்டது. உங்கள் சின்னச்சின்ன நட்பூடல்கள் தகர்ந்துவிடாதா என்ன?
—
No comments:
Post a Comment